மகன் இயக்கத்தில் நடிக்கும் இயக்குனர் பாரதிராஜா.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் பாரதிராஜா. இவர் 80 மற்றும் 90களில் இயக்கிய திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமத்து இயற்கை சூழலை தனது திரைப்படங்கள் மூலம் வெளிக்காட்டுவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இதுவரை இவர் 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் சமீப காலமாக இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இறுதியாக இவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'நா நா' மற்றும் தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா   அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் 'மார்கழி திங்கள்' என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

காதல் கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manoj bharathiraja in Markazi Thingal movie 1st look poster


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->