புஷ்பா " ஊ சொல்றியா " நடனம் ஆட வேண்டாம் என பலர் கூறினார்கள் - சமந்தா! - Seithipunal
Seithipunal


விவாகரத்து ஆன நிலையில், புஷ்பா படத்தில் வரும் " ஊ சொல்றியா " பாடலுக்கு நடனமாட வேண்டாம் என அறிவுறுத்தியதாக சமந்தா கூறியுள்ளார்.

 புஷ்பா திரைப்படம் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. புஷ்பா திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். புஷ்பா படத்தில் " ஊ சொல்றியா மாமா..ஊ சொல்றியா " பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. புஷ்பா 2 தயாராகி வளரும் விலையில் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த நிலையில் புஷ்பாபு படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடிய நடிகர் சமந்தா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கூறி இருப்பதாவது, 

நாக சைத்தன்யாவுடன் விவாகரத்து அறிவித்த சமயத்தில் புஷ்பா படத்தின் பாடலுக்கு நடனமாட வாய்ப்பு வந்த போது, அதில் நடிக்க வேண்டாம் என குடும்பத்தார், நண்பர்கள் கூறினார்கள். இருந்தாலும், திருமண வாழ்க்கையில் 100 சதவீதத்தை கொடுத்தும் பயனளிக்காத நிலையில், விவாகரத்தையும் ஊ சொல்றியா பாடலில் நடிப்பதையும் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டதாக சமந்தா கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Many people told Pushpa not to do the O Solriya dance Samantha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->