Ak61-ல் கலக்க வரும் பிரபல நடிகை.! வெளியான மாஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இந்த வாரம் ஓடிடியில் படம் வெளியாகியுள்ளது. 

சமீபகாலமாக அஜித்தின் அடுத்த படம் #AK61 குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை போனிகபூர் இயக்க எச்.வினோத் தயாரிக்கவுள்ளார். AK61 படம் குறித்த தகவலே இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், நடிகர் அஜித்தின 62வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

இத்தகைய சூழலில், Ak61 படம் ஆக்ஷன் காட்சிளேயில்லாமல் கமர்சியல் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாத இறுதியில் இதன் படப்பிடிப்புகள் துவங்கிய நிலையில், இந்த படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புனேவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில் நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் நடிப்பதற்காக புனேவிற்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May manju warrior act In ak61


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->