அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் விஜய்.!? அவரே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் இதுகுறித்த மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகின்றது. திரைப்படம் படம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று விஜய் ரசிகர்களே பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் செல்வராகவன் நடிகர் விஜய் படத்திற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அது நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், கால்ஷீட் மற்றும் சரியான கதை அமைந்து விட்டால் கண்டிப்பாக விஜயை வைத்து படம் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may vijay next movie with selvaragavan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->