மாரடைப்பால் காலமான மயில்சாமி நடித்துள்ள கடைசி படத்தின் டப்பிங் காட்சி.!
Mayilsamy in Classmates movie dubbing video
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மயில்சாமி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். 1985-ம் வருடம் வெளியாகிய கன்னிராசி திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படமாகும்.
சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடிகர் மயில்சாமி பலகுரல் மன்னனாக திகழ்ந்தவர். இவர் திரைப்பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 - ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்பாளராக போட்டியிட்டவர் நடிகர் மயில்சாமி.
அத்துடன் பெருந்தொற்று கொரோனாவால் பலரும் அவதிப்பட்ட காலத்தில் அவர்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்தவர் தான் நடிகர் மயில்சாமி. இந்த நிலையில், அவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு கேளம்பாக்கம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்ட நிலையில், தான் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது இறப்பு செய்தியை அவரது மகன் உறுதிபடுத்தியுள்ளார்.
இவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மயில்சாமி கடைசியாக நடித்துள்ள 'கிளாஸ்மேட்ஸ்' படத்திற்காக நேற்று டப்பிங் பேசிய காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Mayilsamy in Classmates movie dubbing video