'திருமணம் செஞ்சுக்கலாமா?' கேள்வி கேட்ட ரசிகருக்கு நடிகை மீனாவின் பளிச் பதில்.! - Seithipunal
Seithipunal


இன்று நடிகை மீனா ரசிகர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அப்போது ஒரு ரசிகர் மீனாவிடம் இருபது ஆண்டுகளுக்கு முன் சென்று புதிதாக பிறந்து நான் உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கேட்டார். இதை கேட்ட நடிகை மீனா தனது திருமண ஆல்பத்தை எடுத்து காட்டி நீங்கள் கொஞ்சம் லேட் என்று பதிலளித்திருந்தார். 

அத்துடன் சிம்பு-தனுஷ் இருவரில் யார் சிறந்த நடிகர் என்று கேள்வி எழுப்பிய போது இருவருமே சிறந்த நடிகர்கள் தான் என்று மீனா பதிலளித்தார். ஒரு ரசிகர் உங்கள் வயது என்ன என்று கேட்டதற்கு நடிகை மீனா பெண்களிடம் வயதை கேட்பது நாகரீகமான விஷயமல்ல என்று பதிலளித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து, பல்வேறு விதமான ரசிகர்களின் கேள்விக்கு நடிகை மீனா பதிலளித்து வந்தார். அவரது லைவ் வீடியோ ரசிகர்களிடம் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meen answers to fans in social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->