பிரபல தமிழ் நடிகைக்கு போலீஸ் வலைவீச்சு.! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி ஆணை.! - Seithipunal
Seithipunal


பட்டியிலனத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், தமிழ் நடிககை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை மீரா மிதுன் தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறாகப் பேசி ஒரு விடியோவை பதிவிட்டாா். 

இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். 

மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அம்பத்தூரைச் சோ்ந்த அவரது நண்பா் அபிஷேக்கையும் கைது செய்தனா். 

இந்த வழக்கில் இவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இவர் சம்மந்தமான வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாததால், ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஆக.29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mithun case court order aug


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->