மெல்போர்ன் இந்திய திரைப்பட விருதுகள் : "மகாராஜா" திரைப்பட இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு விருது
Melbourne Indian Film Awards Maharaja director Nithilan Saminathan wins
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜாவை, இயக்குநர் நித்திலன் இயக்கினார்.
ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக கொண்டு படத்தை கையாண்ட இயக்குநர் நித்திலன், இந்த படத்தில் அடுத்தடுத்த திருப்புமுனைகளை அளித்து, கிளைமேக்ஸில் ரசிகர்களின் மனதை வென்றார்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, நட்டி, அருள்தாஸ், முனிஷ்காந்த்பாய்ஸ் மணிகண்டன், பாரதிராஜா, , சிங்கம் புலி, மம்தா மோகன் தாஸ்,அபிராமி உள்ளிட்டோர் சிறப்பாக நடித்து படத்திற்கு உயிரூட்டியிருந்தனர்.
இதற்கிடையே இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி, ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது. தொடர்ந்து இத்திரைப்படம், ஓடிடி-ல் வெளியான பிறகு அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்து அசத்தியது.
இந்நிலையில், மெல்போர்ன் திரைப்படவிழாவில் மகாராஜா திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான விருதினை வென்றது. முன்னதாக மெல்போர்னில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இயக்குனர்களின் பெயர்கள் திரையிடப்பட்டது. அதில் சிறந்த இயக்குநருக்கான விருதுப்பட்டியலில், அதிகப்படியான விருப்பத்துடன் மகாராஜா இருந்தது. இதையடுத்து சிறந்த இயக்குனருக்கான விருதை நித்திலன் சாமிநாதன் பெற்றார்.
English Summary
Melbourne Indian Film Awards Maharaja director Nithilan Saminathan wins