நடிகர் சங்கத்திற்கு 1 கோடி வழங்கிய அமைச்சர் - காரணம் என்ன?
minister uthayanithi stalin one crores donate to actor union
தமிழ் சினிமாவில் நடிகர் சங்கத்திற்கு என்று தியாகராய நகர் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக இந்தப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்க நிர்வாகிகள் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத்தினரை நேரில் அழைத்து தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இந்தப் பணத்தை தலைவர் நாசர், விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் வாங்கினர். நடிகர் சங்கத்திற்கு பணம் வழங்கியதற்காக சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்காகவும், முடிந்தவரை விரைவாக கட்டடம் கட்டும் பணிகளை முடிக்க உதவ முன்வந்ததற்காகவும் நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தற்போதைய தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் ஒரு அழகான செயல். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
minister uthayanithi stalin one crores donate to actor union