பாலிவுட் நடிகைகளை ஓரம்கட்டி முதல் இடம் பிடித்த சமந்தா.. எதில் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது விஜய் தேவர்கொண்டவுடன் குஷி என்ற படத்திலும், சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். 

நடிகை சமந்தா சமீப நாட்களாக மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அதனால், சினிமாவில் இருந்து சிறிது காலத்திற்கு ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. அதன்படி புகழ்பெற்ற தனியார் நிறுவனம் நடத்திய ஜூன் மாத கருத்து கணிப்பில் 2023 ஆம் ஆண்டின் பிரபலமான பெண் நட்சத்திரங்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் சமந்தா எட்டாவது முறையாக இந்த கௌரவத்தை பெற்றுள்ளார்.

சமந்தாவுக்கு அடுத்தபடியாக ஆலியா பட், நயன்தாரா, தீபிகா படுகோன், காஜல் அகர்வால், த்ரிஷா, கேத்ரினா ஃகைப், கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Most popular actress Samantha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->