"எனது ஓட்டு அவருக்குதான்..." சின்னத்திரை நடிகை ஓப்பன் டாக்.!
My vote is for him Small screen actress open talk
தேர்தலில் தனது ஓட்டு இவருக்குத்தான் என சின்னத்திரை நடிகை ஆலியா மானசா வெளிப்படையாக பதிலளித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ராஜா ராணி" தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்நடிகை ஆலியா மானசா, இந்த "ராஜா ராணி" தொடரின்வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
இந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார். ஆலய மனசா இவர்நடித்த "ராஜா ராணி" தொடரில் நாயகனாக நடித்துள்ள சஞ்சீவ் என்பவரும் இறுதியில் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் 20ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஆலியா மானசா கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மதுரைக்கு வருவது எப்போதுமே மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். இங்குள்ள மக்கள் மிகவும் உரிமையுடன் பழகுவார்கள். அந்த அன்பு இங்கு மட்டுமே கிடைக்கும்" என்றார். மேலும் சினிமாவை விட தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலமாகவே மக்களுடன் நெருக்கமாக இருக்க முடிகிறது என்பதால் சின்னத்திரை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று அவர் கூறினார்.
இதையடுத்து, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எனது ஓட்டு அவருக்குதான்" என்று பதிலளித்தார். அதே சமயம், "விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதா?" என்ற கேள்விக்கு, "பிரசாரத்திற்கு என்னால் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு மற்றும் குடும்பத்தை கவனித்து கொள்வதற்கே எனது முழு நேரமும் செலவாகிறது. ஆனால் நான் நிச்சயமாக விஜய்க்குதான் வாக்கு செலுத்துவேன்" என்று தெரிவித்தார்.
English Summary
My vote is for him Small screen actress open talk