உடன்பிறப்பின் படம்! இளையராஜாவிடம் சண்டை! மிஷ்கினின் புது விளக்கம்! - Seithipunal
Seithipunal


இளையராஜாவிடம் சண்டை போட்டுவிட்டதால், தனது சகோதரர் இயக்கியுள்ள படத்திற்கு இசையமைக்கச் சொல்லி மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது என்று, ‘டெவில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.

’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநரும், இயக்குனர் மிஷ்கினின் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள படம் ‘டெவில்’. 

இந்த படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கதிர், வெற்றிமாறன், ஆர்.கே.செல்வமணி, வின்செண்ட் செல்வா, பாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசுகையில், “எனக்கு இன்று கர்நாடக, ஹிந்துஸ்தானி இசை கற்றுத் தரும் ராமமூர்த்தி எனக்கு ஒரு குருநாதர். இன்னொரு குருநாதர் இளையராஜா அவர்கள் தான்.

எனக்கு எட்டு வயதாக இருக்கும். அப்போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செய்துகொண்டே, ‘அன்னகிளி உன்னத் தேடுதே’ பாடலை கேட்டது முதல் இளையராஜா எனக்கு குருநாதர் ஆனார்.

எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். அவருடன் சண்டை போட்டுவிட்டேன். மீண்டும் அவரிடம் போய் இசை அமைத்து கொடுமாறு நிற்க முடியாது.

அப்புறம் எனக்கும் கொஞ்சம் போர் அடிக்கிறது. அதனால்தான் இசையமைக்க முடிவு செய்துவிட்டேன். இந்த இசைப் பயணத்தின் மூலம் இளையராஜாவின் காலடியில் சேர்வேன். இவ்வுலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான் இசையமைப்பாளர்கள். நான் இல்லை” என மிஷ்கின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Myskin say about Ilayaraja fight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->