யோகிபாபுவுடன் இணையும் நதியா.?! வெளியான சுவாரஸ்ய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. 1985ல் வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு கணவருடன் லண்டனில் செட்டிலானார். 

இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நதியா அதன் பிறகு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். சமீபகாலமாக தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கத் திரும்பியுள்ளார். 

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் பெரும் வெற்றியடைந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இதனை தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகை நதியா ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளார். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் லவ் டுடே படத்தின் நாயகியான இவானா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் நடித்துள்ளார். தற்போது, ​​நதியா மற்றும் யோகி பாபு படத்தின் செட்டில் இருக்கும் போது ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபு பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nadhiya and Yogi babu In dhoni movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->