அரசு பேருந்து நடத்துனர் பணி - பெண்களுக்கான உயரம் குறைவு.!
womens height reduction for government bus conductor job
தமிழக அரசு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மகளிருக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் அரசுப்பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு அதிக அளவில் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
womens height reduction for government bus conductor job