அம்மனுக்கு பர்கர், பீசா, சமோசா படைத்தது வழிபடும் வினோத கோவில்; எங்கிருக்கு தெரியுமா?
A strange temple where the goddess is worshipped by offering burgers and pizzas
நமது பாரத மண்ணில் பழமையான பாரம்பரிய கோவில்களுக்கு பஞ்சமில்லை. லட்ச கணக்கான கோவில்கள் நிறைந்த புண்ணி பூமி நமது இந்தியா. அதிலும், விநோதமான வழிபாடுகள் மற்றும் அமானுஷ்ய நிறைந்த கோவில்களும் ஆங்காங்கே இருக்கிறது.
இது போன்ற விநோதமான கோவில்களுக்கு பக்தர்கள் அதிகம் செல்வார்கள். அப்படி அம்மனுக்கு பொங்கல் புலியோதரை,மாவிளக்குக்கு பதிலாக பீசா, பர்கர், சமோசா படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட ஒரு கோவில் இருக்கு. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் தான் இந்த வித்தியாசமான கோவில் அமைந்திருக்கிறது. இங்குள்ள புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவிலில் தான் இந்த விநோத வழிபாடும் நடக்கிறது. அதாவது, சாதாரண நாட்களை விட நவராத்திரி போன்ற நாட்களில் மிக அதிக அளவிலான பக்தர்கள் இக் கோவிலில் வழிபாடு நடத்த வருவார்கள். அந்த நாட்களில் இந்த வித்தியாசமான நெய்வேத்தியத்தை அம்பாளுக்கு படைப்பதாக கூறப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/samosa-56wse.jpg)
நவராத்திரி காலத்தில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து, ஒவ்வொரு நிறங்களில் வஸ்திரம் அணிவித்து, தினம் ஒரு விதமான நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள்.
ஆனால், ராய்பூர் துர்க்கை அம்மன் கோவிலில் மட்டும் வித்தியாசமாக பக்தர்கள், துர்க்கை அம்மனுக்கு பீசா, பர்கர், சமோசா என பலவிதமான பொருட்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த கோவிலில் அருள்பாலிக்கும் தூமாவதி அம்மன் அமர்ந்த கோலத்தில் புகையை வெளியிடும் நெருப்புக்கு மத்தியில் அமர்ந்து காட்சி அளிக்கிறாள். இந்த அம்மனுக்கு மிளகாய் பஜ்ஜி, கச்சோரி, பருப்பு வடை, சமோசா, பர்கர், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை தான் நைவேத்தியமாக படைத்து வழிபடுகிறார்கள்.
![](https://img.seithipunal.com/media/samosa 2-8rqsp.jpg)
அத்துடன், இந்த கோவில் 10 மகாவித்யா தலங்களில் இது ஏழாவது மகாவித்யா பீடமாக விளங்குகிறது. தூமாவதி மாதாவிற்கு உப்பான உணவுகள் தான் மிகவும் பிடிக்கும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
ஆக, இக்கோவிலுக்கு வரும் பக்தர்களும் அது போன்ற உணவுகளையே படைத்து வழிபடுகிறார்கள். இன்னும் சிலர் தூமாவதி அம்பாள் தங்களின் கனவுகளில் வந்து பீசா, பர்கர், சமோசா போன்ற உணவுகளை படைக்கும் படி கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
இப்படியான வித்தியாசமான நைவேத்தியம் படைத்து வழிபடும் முறை கடைபிடிக்கப்படுவதாலேயே இந்த கோவிலும், இங்குள்ள தூமாவதி அம்மனும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
English Summary
A strange temple where the goddess is worshipped by offering burgers and pizzas