பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா.? ஓபனாக பதில் கூறிய நாக சைதன்யா.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இதற்கு சமீப காலமாகவே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சமந்தா தனது கணவரை பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அதுபோலவே கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது இருவரது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின்னர் சினிமாக்களில் சமந்தா கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 

இந்த விவாகரத்து வலியை மறக்க அவர் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றார். ஆன்மீக பயணம் மேற்கொண்டார். எப்பொழுதும் சமூக வலைதளங்களில் சமந்தா சுறுசுறுப்பாக இயங்கி வருவார். இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யாவுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகை ஷோபிதா துலிபல்லாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நடிகர் நாக சைதன்யாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று பதில் கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naga saithanya about 2nd Love


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->