தேசிய விருது : சார்பட்டா பரம்பரை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது....பா.ரஞ்சித் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal



இயக்குனர் லிங்குசாமியிடமும், வெங்கட் பிரபுவிடமும் உதவி இயக்குநராய் பயிற்சி பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித்,  2012 ல் வெளியான 'அட்டகத்தி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கினார்.

மேலும், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசிய போது, சார்பட்டா பரம்பரை வெற்றிப் பெற்ற படமாக நாம் கொண்டாடும் அதே சமயத்தில், விருது விழாக்களில் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது.

கிரிட்டிக்ஸ் விருதில் சார்பட்டா பரம்பரை பல விருது பெற்றன. அப்படி வாங்கினால் நிச்சயமாக தேசிய விருதும் அளிப்பார்கள். ஆனால் நம்முடைய தேசிய விருது பட்டியலில் சார்பட்டா பரம்பரை உள்ளேயே போக முடியவில்லை என்றும், இந்த விருதுகளுக்கு சார்பட்டா பரம்பரை தகுதியில்லாததா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், வேண்டுமென்றே எனது வேலையை மதிக்கக் கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த வெறுப்பை அரசியலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Award sarpatta parambarai was deliberately ignored P Ranjith Accused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->