நயன்தாரா கையிலிருக்கும் அதிர்க்ஷ்ட முத்திரையை கவனித்துள்ளீர்களா.?! இது தான் வெற்றிக்கு காரணமா.!?  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகில் தற்போது முடிசூடா ராணியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று திரையுலகிலும் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார். அவரது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாரா கெத்தாக அழைக்கப்படுவார். 

அத்துடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் "அண்ணாத்தே" படத்தில் நடிப்பதற்காக அவர் ஹைதராபாத் சென்றுள்ளார். அத்துடன், அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகின்ற 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விக்னேஷின் சிவனின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது. 

நடிகை நயன்தாரா கிறித்துவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட இந்து மாதத்தில் அவருக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, கோவில் கோவிலாக சுற்றி திரிவதை வழக்கமா கொண்டவர் அவர். அதிலும், அவரது படங்கள் குறித்த முடிவை கூட ஜாதகம் பார்த்துவிட்டு தான் சொல்வார். அந்தளவிற்கு அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. 

மேலும், அவருடைய திருமணத்தை கூட தள்ளிப்போட காரணமே ஜாதகம் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட, இந்த விஷயத்தை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். 

நயன்தாராவின் இடது கையில் ஆறு விரல் இருக்கின்றது. சாதாரண மனிதர்களுக்கு ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் தான் இடம்பெற்றிருக்கும். ஆனால், நடிகை நயன்தாராவின் இடது கையில் 6வதாக ஒரு விரல் இருப்பது மிக அதிசயம். பொதுவாக 6வது விரல் கொண்டிருப்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுவது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara 6 th finger


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->