விஷ்ணுவர்தன் இயக்கத்தில் "நேசிப்பாயா"... வெளியான மாஸ் அப்டேட்!
Nesippaya movie first look update
கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இதனை தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அஜித் நடிப்பில் கலந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருபுமுனையாக இந்த திரைப்படம் அமைந்தது.
அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் விஷ்ணுவர்தன் ''நேசிப்பாயா'' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
English Summary
Nesippaya movie first look update