லிப்டில் பயணம் செய்கின்றவர்கள் உஷார்! பாதியில் நின்ற லிப்ட்! தப்பிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலி! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தடைப்பட்டதால் பாதியில் நின்ற லிப்டில் இருந்து வெளியே வர முயன்ற முதியவர் கீழே விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கணேசன். மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் கணேசன் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை கணேசன் 8வது மாடியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டு 6வது மாடிக்கு இடையே லிப்ட்  நின்றுவிட்டது.

இதனால் அதிர்ச்சடைந்த கணேசன் லிப்டுக்குள் இருந்தபடியே சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் தரைதளத்தில் இருந்து லிப்ட் ஆப்ரேட்டர் சாமுவேல் மற்றும் குடியிருப்பு வாசிகள் கணேசனை பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர்.

லிப்டின் முன்புறத்தில் சிறிது இடைவெளி இருந்ததால் கணேசன் அந்த வழியாக இறங்கி 6வது மாடிக்கு வர முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி லிப்ட் மற்றும் சுவர் இடைவெளி வழியாக அதன் அடித்தளத்தில் தலை குப்புற விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கணேசன். சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.  இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த புளியந்தோப்பு போலீசார் கணேசன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே சேதமடைந்திருப்பதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், லிப்டை சரியாக பராமரிக்காததை சுட்டிக்காட்டி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் திடீரென சாலை மறியல் ஈடுபட தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. லிப்ட் பாதியில் நின்றதால் தப்பிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man fell down while trying to get out of the half stopped lift due to power outage


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->