வலைதளத்தில் வைரலாகும்  'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' பாடல்.! - Seithipunal
Seithipunal


விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர், இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்தான். 

இதைத் தொடர்ந்து, இவர் விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களுக்கு புரோமோ பாடல்கள் எழுதியுள்ளார். அந்தப் பாடல்கள் திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர், ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்ற ஆல்பம் பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடலை இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சனுக விக்கிரமசிங் இசையமைத்துப் பாடியுள்ளார். 

இந்தப் பாடல் கணவனால் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் வலியை விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களாலும் கவனம் பெற்று ரசிக்கப்பட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new album song ayyo samy ne yenakku venam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->