பாரதிராஜாவின் சூப்பர் ஹிட் படத்தை காப்பி அடிக்கிறாரா அட்லீ.? ஜவான் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்து வரும் அட்லீ. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து  ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருகின்ற அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை தொடர்பான சர்ச்சைகள் வெளியாகி சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றன.

அட்லி திரைப்படங்கள் என்றாலே கதையில் சிக்கல் இருக்கும் என்பது தமிழ் சினிமாவில் பொதுவான ஒன்றுதான் என்றாலும் தற்போது அவர் பாலிவுட் இயக்கி வரும் திரைப்படத்திற்கும் உருவாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் கதை விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின் கதை தான் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் கதை பேரரசு திரைப்படத்தின் கதை இல்லை என்றும் அது கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் கதை என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New problem for Jawan movie Did Atlee copy Bharathiraja super hit movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->