பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை.! வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 14ஆம் தேதி அன்று நாடு முழுவதிலும்  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையும்  சட்டமேதைமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இது விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமதர்மம், சம உரிமைகளை பெற்றுத் தந்தவர் அம்பேத்கர். இன்று அவரது பிறந்த நாளை  நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு விஜய் ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தளபதி விஜய் ஏற்கனவே அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வரும் வேளையில்  அவரது ரசிகர்களின் இந்த செயல் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

 விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அடுத்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது தளபதி வெகு விரைவிலேயே அரசியலுக்குள் வருவார் என்று தான்  கணிக்கப்படுவதாக பல திரை  விமர்சகர்களும் அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையே அவரது ரசிகர்களும் நீண்ட எதிர்பார்ப்பாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

On the occasion of Dr Ambedkar birthday Vijay People Movement paid homage to Ambedkar statue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->