கேரளாவில் அடுத்தடுத்து நடந்த சோகம் - 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை.!
10th class students sucide in kerala
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இன்று மட்டும் இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் அட்டிங்கலில் உள்ள தனது வீட்டில் 15 வயது சிறுவன் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், மாரநல்லூரில் உள்ள அதே வயதுடைய பெண் ஒருவர் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு இடையே இந்த சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
10th class students sucide in kerala