ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்னாமில் அதிகம் செலவிடுகிறார்; ஏன் என விளக்க வேண்டும்..? மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்..!
Rahul Gandhi spends more in Vietnam than his constituency Why should he explain Union Minister Ravi Shankar Prasad
காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ள தாகவும், வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும் என பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:- ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றுள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் தன்னுடைய சொந்த மக்களவை தொகுதி நீண்ட நேரம் செலவழிப்பதில்லை. திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் ராகுலின் வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து அவர் விளக்க வேண்டியது அவசியம் என்றும், .அவர் அங்கே அடிக்கடி செல்வது மிகவும் வினோதமானது உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும் எனவும் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பாஜக ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில் "எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியை ராகுல் காந்தி வகிக்கிறார். மேலும் அவர் மேற்கொண்ட ஏராளமான ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தேசியப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன." என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..!
English Summary
Rahul Gandhi spends more in Vietnam than his constituency Why should he explain Union Minister Ravi Shankar Prasad