இன்று முதல்.. அமேசான் ஓடிடி தளத்தில் சிம்புவின் "பத்து தல".! - Seithipunal
Seithipunal


இன்று முதல்.. அமேசான் ஓடிடி தளத்தில் சிம்புவின் "பத்து தல".!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. காதல் அழிவதில்லை, கோவில், மன்மதன், சரவணா, ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த "பத்து தல" படம் கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’-யின் ரீம்மேக். இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். 

பிரபல இயக்குநர் கிருஷ்ணா இயக்கிய இந்த படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனை சிம்புவின் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடனும் கொண்டாடினர். 

இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே, ரூ.12.3 கோடி வசூல் செய்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது. அதனால், இந்த படம் சிம்புவின் திரைப் பயணத்தில், சிறந்த ஓபனிங்காகவும் கருதப்படுகிறது. 

இந்த நிலையில் ”பத்து தல” படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதனால், சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paththu thala movie release amezon ott prime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->