ப்ளீஸ் இதை நம்பாதீங்க!...ரசிகர்களிடம் நடிகர் சல்மான் விடுத்த அந்த வேண்டுகோள் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நடிகர் சல்மான் கான் நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில், சல்மான் கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சல்மான் வெளியிட்டுள்ள தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சல்மான் கானோ அல்லது அவருடன் இணைந்த நிறுவனங்களோ அல்லது குழுக்களோ அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவில்லை என்பதை தெரிவிக்கவே இது என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இது போன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்கும் மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது விளம்பரங்கள் எதையும் நம்ப வேண்டாம் என்றும், தன் பெயரை, மோசடி நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  பதிவிட்டுள்ளார்.

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Please do not believe this Do you know what actor Salman requested to his fans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->