அஞ்சாமை படத்தில் நடித்தது குற்றமா? நடிகை வாணி போஜன் மீது போலீசில் புகார்!! - Seithipunal
Seithipunal


சென்னை : அஞ்சாமை பட நடிகை வாணி போஜன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகியாக நடித்து பின்னர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் வாணி போஜன். அவர் சமீபத்தில் அஞ்சாமை என்ற படத்தில் நடித்திருந்தார்.

விதார்த், வாணி போஜன் ஜோடியாக நடித்த அஞ்சாமை திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் நடிகர் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் எஸ்.பி சுப்புராமன் அஞ்சாமை திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

நீட் தேர்வால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்த இந்த படம் உருவாகி இருந்தது. நீட் தேர்வினால் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் படத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர். 

இந்த நிலையில் அஞ்சாமை படத்தில் நீட் தேர்வு குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் அனுப்பி உள்ள புகார் மனுவில் நீட் தேர்வை தடுக்கும் வகையில் அஞ்சாமை படம் உருவாகி உள்ளது. நாடு முழுவதும் கலவரத்தை உருவாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன.

எனவே படத்தில் நடித்த விதார்த் , வாணி போஜன் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police complaint against actress Vani Bhojan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->