நீங்களே இப்படி செய்யலாமா? வெங்கட் பிரபுவின் பட நாயகனுக்கு 3 டிஜிட் அபராதம்.! - Seithipunal
Seithipunal


மாநாடு மற்றும் மன்மத லீலை படங்களுக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் நாக சைதன்யா நடிக்க உள்ளார். 

வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் பட நாயகன் நாக சைதன்யாவுக்கு ஹைதராபாத் போலீசார் 700 ரூபாய்  அபராதம் வைத்துள்ளனர்.

ஹைதராபாத்தின் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரை காவல்துறையினர் மறுத்தனர். 

அவரது காரில் கருப்பு நிற கண்ணாடி இருந்ததால் 700 ரூபாய்  அபராதம் விதித்தனர். கருப்பு நிற கண்ணாடி உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அபராதத்தை உடனடியாக கட்டிய நாக சைதன்யாவிடம், உங்கள் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா? என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police fine naga saithanya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->