#PS2:: பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட்...!! - Seithipunal
Seithipunal


கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின், சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஓரளவு நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது இப்படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான அடுத்த ஒன்பது மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்2 இந்த ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாட வைக்கும் வகையில் வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பதிவில் "ஐமேக்ஸின் பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒருமுறை பொன்னியின் செல்வன் உலகில் மூழ்குங்கள்! ஏப்ரல் 28 முதல் உலகெங்கிலும் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்தக் காவிய அனுபவத்தைப் பெறுங்கள்" என பொன்னியின் செல்வனின் புது போஸ்டர் உடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniin Selvan2 Movie Release Date Announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->