ரசிகர்களை கவர்ந்தானா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.? Review இதோ.!
ponniyin selvan movie review
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெய்ராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சோழர்களுடைய வரலாற்றை பேசும் விதமாக இந்த படம் குறித்த விமர்சனத்தை காண்போம்.
வந்தியத்தேவனின் பயணமாக துவங்கும் இந்த படத்தில் விக்ரம் கரிகால சோழனாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். கரிகாலனாக கச்சிதமாக தனது திறமையை விக்ரம் வெளிப்படுத்தியுள்ளார். வந்திய தேவனாக கார்த்தியின் வசன உச்சரிப்பில் சிலர் தடுமாற்றங்கள் இருந்த போதும், ஆரம்பத்தில் இருந்த தடுமாற்றம் படத்தின் பாதிக்கு மேல் இருக்கவில்லை.
கார்த்தியின் கதாபாத்திரம் ரசனைக்குரிய ஒரு கதாபாத்திரமாக காட்டப்பட்டுள்ளது. செல்லும் இடமெல்லாம் பெண்களிடம் ஜொள்ளு விடும் நாயகனாக வந்திய தேவன் இருக்கிறார். அதுவும் ரசனைக்குரிய வகையில் தான் இருக்கிறது.
ஆழ்வார்க்கடிகளாக நடித்துள்ள ஜெயராம் எளிமையான மதிப்பினால் பலரையும் ஈர்க்கிறார். இவர் கதாபாத்திரம் வெறும் நகைச்சுவைகானது என்று நாம் நினைத்து முடிப்பதற்குள் வெறும் நகைச்சுவை மட்டும் அல்ல என்று அவர் தனது புத்திசாலி தனத்தையும் வெளிப்படுத்தி விருக்கின்றார்.
கவர்ச்சி மிகுந்த ஹீரோயினாக பார்த்த ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தில் வயதான தோற்றம் இருந்தாலும், இளசுகளை ஈர்க்கும் வண்ணத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார். இளமை மாறாத திரிஷா குந்தவை கேரக்டருக்கு நூறு சதவீதம் தகுதியானவர். ஒரு அரசகுல பெண்ணாக அந்த திமிரும், புன்னகையும், திறமையும் பார்ப்பவை வியக்க வைக்கிறது.
சோழர்களின் வரலாறு, வீரம் அங்கே நடக்கின்ற சூழ்ச்சி என்று படம் சுவாரசியமாக செல்லும் நிலையில் ஆக்ஷன் காட்சிகளுடன் படம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டுகிறது. வல்லவரையன் வந்திய தேவனை கொண்டு படம் நகர்ந்த நிலையில், இடைவேளைக்கு பின்னர் முழுக்க முழுக்க அருண்மொழிதேவனை நோக்கி கதைகளம் நகருகிறது.
இரண்டாம் பாகத்திற்கான லீட் அப்போதே துவங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். அழுத்தமாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். படத்தின் கிளைமேக்ஸ் பிரம்மாண்டம் மிகுண்டதாக இருந்த நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியவாறே படம் முடிகிறது.
விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில் அது குறித்த எதிர்பார்ப்பு தற்போது எகிறும் விதமாக அதிகரித்துள்ளது. பாகுபலியின் அளவிற்கு படம் தாரமானதா என்று கேட்டால். ஏறக்குறைய என்று கூறலாம்.
மொத்தத்தில் பொன்னியின் செல்வன் (7/10)
English Summary
ponniyin selvan movie review