இந்த பக்கம் விஜய்.. அந்த பக்கம் அனிருத்.. பூஜா ஹெக்டேவுடன் நெருக்கம்.! ஏங்கும் நெல்சன்.!  - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லனாக செல்வராகவன் நடித்திருந்த நிலையில் பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், 2 மணிநேரம் 35 நிமிடங்கள் ஓடக் கூடிய படம் இது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. 

இத்தகைய நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தின் புரமோஷனுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத் மற்றும் விஜய்க்கு நடுவில் கை கோர்த்தவாறு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இயக்குனர் நெல்சன் குமார் ஏக்கமாக பார்ப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pooja hegde beast movie promotion photos viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->