வெள்ளித்திரையில் கால் பதித்த சாய்பல்லவி தங்கை.! லைவ் ஸ்ட்ரீமில் சித்திரை செவ்வானம்.! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாகவே மக்கள் மத்தியில் ஓடிடி இணையதளங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது சாய்பல்லவி யின் தங்கை பூஜா கண்ணன் நடித்த சித்திரை செவ்வானம் zee5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வா இயக்கும் இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் விஜய் தயாரித்துள்ளார்.

பிரபல தென்னிந்திய நடிகையான சாய்பல்லவி யின் சகோதரி பூஜா கண்ணன் சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னதாக இயக்குனர் விஜயிடம் பூஜா கண்ணன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

சில குறும்படங்களில் பூஜா கண்ணன் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் வெள்ளித்திரையில் ஹீரோயினாக கால் பதித்துள்ளார். இந்த படம் குறித்து தனது வாழ்த்துக்களை நடிகை சாய் பல்லவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja kannan in chithirai sevvanam movie streaming


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->