அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல நடிகர் பிரதீப் மர்மமான முறையில் திடீர் மரணம்!! - Seithipunal
Seithipunal


அசோக் செல்வனின் தெகிடி படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் பிரதீப் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் தெகிடி, லிப்ட், சபாபதி போன்ற திரைப்படங்களில் நடித்தது மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். நகைச்சுவை, வில்லன் கதாபாத்திரம் என தனது நடிப்பால் ரசிகர் மத்தில் பிரபலமடைந்தவர் பிரதீப் கே.விஜயன். இந்த நிலையில் அவர் தற்போது தனது வீட்டில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன் கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. நண்பர்கள் தொடர்புகொண்டபோது செல்போன் ஸ்வீட்ச் ஆப் என வந்துள்ளது. பின்னர், நடிகர் பிரதீப் காவல்துறை உதவியுடன் கதவை உதைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்துள்ள விஷயம் தெரிந்துள்ளது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகர் பிரதீப் கே விஜயன் தனது வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Popular actor Pradeep dies mysteriously


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->