பிரபாஸ் கொஞ்சம் கூட மாறவில்லை.....மாளவிகா-பிரபாஸ் இடையே நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal



மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்'  உள்ளிட்ட  படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் 
தற்போது  விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் தங்கலான் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார்.

இந்நிலையில்  தற்போது இவர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார். பிரபாஸ் 'கல்கி 2898 ஏடி' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் பிரபாஸுடன் பணிபுரியும் அனுபவத்தை குறித்து மாளவிகா மோகனன் கூறுகையில், கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரபாஸுடன் படப்பிடிப்பை ஆரம்பித்ததாகவும், மிகப்பெரிய வெற்றி படத்தை பிரபாஸ் கொடுத்திருந்தாலும், அவர் கொஞ்சம் கூட மாறவில்லை என்று கூறினார்.

மேலும், அதே அடக்கமான மற்றும் சாதாரண நபராகவே நடந்து கொள்வதாக தெரிவித்துள்ள அவர், தி ராஜா சாப்' படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் பிரபாஸ் இருக்கிறார். ஒட்டுமொத்த குழுவும் எனக்கு உறுதுணையாக இருப்பதாகவும்,இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் பிரகாசிப்பேன் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prabhas hasnt changed a bit What happened between Malavika and Prabhas


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->