விக்ரம் படத்தை பார்த்த கே.ஜி.எப் இயக்குனர் போட்ட முக்கிய ட்வீட்.! - Seithipunal
Seithipunal


கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தில் பகத் பாசில் விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழில் வெளிவந்த பல முக்கிய திரைப்படங்களில் விக்ரம் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.

சமீபகாலமாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வந்தது. இது போல நல்ல திரைப்படம் தமிழில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதை தீர்த்து வைத்த பெருமை விக்ரம் படத்தையே சேரும். 

இந்நிலையில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படம் குறித்த தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "மொத்த படக்குழுவும் வாழ்த்துக்கள். கமலகாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி 3 பேரையும் ஒரே திரையில் பார்ப்பது கண்களுக்கு விருந்து. 

ரோலக்ஸ் கதாபாத்திரத்தை விட்டு வெளியில் வரவே முடியவில்லை. அனிருத் நீங்கள் உண்மையிலேயே ராக்ஸ்டார் தான்." என்று பாராட்டி இருக்கிறார். அத்துடன் லோகேஷ் கனகராஜ்க்கு தனிப்பட்ட முறையில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prasanth neel about vikram movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->