அப்பாவானார் அட்லி.. என்ன குழந்தைன்னு பாருங்க.!  - Seithipunal
Seithipunal


ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் மெர்சல், பிகில், தெறி ஆகிய திரைப்படங்களை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றவர். 

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற அங்கீகாரத்தை அட்லீ பெற்றுள்ளார். இவர் தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 

பிரியா எப்பொழுதும் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதையாவது பகிர்ந்து வருவது வழக்கம். தனது கணவர் மீது அவர் காட்டும் காதல் அனைவருக்கும் பொறாமை படும் விதமாக இருக்கும்.

இந்நிலையில் பிரியா அட்லி தனது instagram பக்கத்தில் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அதன் பின்னர் அவருடைய வளையலணி விழாவும் நடந்தது. இந்த நிலையில், தற்பொழுது அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் பிரியா அட்லி தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priya Atlee getting male baby


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->