தமிழ் திரைத்துறையின் முக்கிய பிரபலம் காலமானார்.. சோகத்தில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எம் முத்துராமன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தயாரிப்பாளர் முத்துராமன் ராஜமரியாதை, மூடு மந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள், ஒரு வீடு ஒரு மனிதன் உள்ளிட்ட 26 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது ஒரு வீடு ஒரு மனிதன் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் எம் முத்துராமன் காலமானார். அவருக்கு சுமங்கலி என்ற மனைவியும், அனு என்ற மகளும் உள்ளனர். எம் முத்து ராமன் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்று பிற்பகல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

producer muthuraman passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->