"உடல் பாகம்.. பெரிதாக இல்லையென கேலிக்கு ஆளானேன்." ராதிகா ஆப்தே வேதனை.!
Radhika was ridiculed for not being a big body part
தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டு இருப்பவர்தான் நடிகை ராதிகா ஆப்தே. இவர் கடந்த 2012 இல் வெளியான தோனி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் சித்திரம் பேசுதடி 2, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த்துடன் சேர்ந்து கபாலி படத்திலும் அவர் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் படங்களில் அதிகப்படியான கவர்ச்சி காட்டி வருவது வழக்கம். இந்தி மற்றும் தென்னிந்திய வெப் சீரிஸ் களில் அதிகப்படியாக அவர் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "என்னுடைய உடல் எடை அதிகரித்த காரணத்தால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. பாலிவுட்டில் நான் திரை பயணத்தை துவங்கிய போது என் மார்பகங்கள் பெரிதாக இல்லை என்றும், என் மூக்கு சரியாக இல்லை என்றும் விமர்சனம் செய்தார்கள்.
பெண்களின் உடல் குறித்து விமர்சனம் செய்வதே ஒரு உரிமையாக கருதுகின்றனர். இது இந்திய சினிமாவின் சாபம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Radhika was ridiculed for not being a big body part