சூப்பர் ஸ்டாரின் #தலைவர்170.. ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. 

மேலும், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள 170 திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய  த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் இந்த திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் போலி என்கவுன்ட்டரை மையமாக கொண்டு எடுக்கப்படும் உண்மை சம்பவத்தை தழுவிய கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. உண்மை கதை அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு பணிகள் கன்னியாகுமரி கேரள எல்லையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini 170 movie may started in July


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->