லோகேஷ் கனகராஜுடன் இணையும் ரஜினிகாந்த்.!!
rajini and director lokesh kanakaraj joined work thalaivar 171
லோகேஷ் கனகராஜுடன் இணையும் ரஜினிகாந்த்.!!
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் ஆரம்ப கட்ட கணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் ரஜினி காந்த் தலைவர் 171 படத்தில் இணைவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக தலைவர் 171 படத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் கனகராஜ் விலகியதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது வெளியாகி உள்ள இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
rajini and director lokesh kanakaraj joined work thalaivar 171