உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கியது ஏன்.? ரஜினி விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் கண்மணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பல்வேறு கோயில்கள் மற்றும் மதக்குருமார்களை சந்தித்தார்.

அப்போது உத்திரபிரதேசம் மாநிலம் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து, அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். ரஜினிகாந்தின் இந்த செயல் சர்ச்சையாகிய நிலையில், விவாத பொருளானது.

இதனைத் தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த் அங்குள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது ஆன்மிக பயணங்களை முடித்துவிட்டு விமான மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,  ஜெயிலர் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் ரசிகர்களுக்கும், உலகின் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தனார் காலில் விழுந்தது குறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்ததால் காலில் விழுவேன் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini explain Yogi Adityanath controversy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->