கலைஞர் சென்னை வந்ததை போல, ரஜினிக்கும் ஒரு பிளாஷ்பேக்.! அவரே கூறிய தகவல்.!
RAJINI SAYS ABOUT HIS LIFE HISTORY
நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், கோலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது ரஜினி மேடையில் பேசும் போது, ’என் மீது நம்பிக்கை வையுங்கள்’ என்று ரஜினி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனை கண்ட அரங்கில் இருந்த ரசிகர்கள் பலரும் சுவாரஸ்யமாக கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
இந்த நிலையில், இவ்விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் நான். நிலாவை பார்த்து சாப்பிட்ட நாம் நிலவில் இறங்கினால் எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படி இருக்கிறது இப்போது. " என்று கூறினார்.

தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத், "அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்தான்." என்று தெரிவித்தார்.
அதன் பின்னர், நடிகர் ரஜினி, "என் அண்ணன் சத்திய நாராயணராவ் கடன் வாங்கி தேர்வு கட்டணம் செலுத்தினார். ஆனால், நான் கடன் வாங்கி என்ன பண்ணினேன் தெரியுமா..? தேர்வு எழுதினால் தேர்ச்சி அடைய மாட்டேன் என்று, வீட்டுக்குத் தெரியாமல் கடன் வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரயில் ஏறி வந்துவிட்டேன்." என்று தெரிவித்தார்.
English Summary
RAJINI SAYS ABOUT HIS LIFE HISTORY