தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள்.. இசை வெளியீட்டு விழாவில் புலம்பிய ரஜினி.!
Rajini speech about drinking habit in jailor audio launch
குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் தற்போது இருப்பதைவிட எவ்வளவோ உயரத்தில் இருந்திருப்பேன் என்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் புலம்பியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு முழு விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், காவியா மாறன், அனிருத், ஜாக்கி ஷரப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒவ்வொருவராக பேசினர். இதில் கடைசியாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாம் சந்திக்கிறோம் என ரசிகர்களை பார்த்து பேசியுள்ளார். அதற்குக் காரணம் சரியான கதையும், இயக்குனரும் தனக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ரஜினி மதுப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எவ்வளவோ உயரத்தில் இருந்திருப்பேன். மதுப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவுசெய்து மது பழக்கத்தை விட்டு விடுங்கள். அதுக்காக குடிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை. எப்போதாவது குடியுங்கள். நீங்கள் குடிப்பதால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கஷ்டப்படுபவர்கள் என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
English Summary
Rajini speech about drinking habit in jailor audio launch