ரஜினியின் ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் என்ன தெரியுமா? படக்குழு அறிவிப்பு.!
Rajinikanth in Jailor movie 3rd single release tomorrow
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன், சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடலான ஜூஜூபி நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Rajinikanth in Jailor movie 3rd single release tomorrow