மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்.. காரணம் என்ன.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை, ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 

இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அவர் ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருகிறார். இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். 

இந்த புனிதமான அறக்கட்டளை இன்றைக்கு நல்ல எண்ணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய திறக்கப்பட்டு உள்ளது. ரஜினி ஆசீர்வாதத்தில் இவை நடைபெற்று உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார், ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது. ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் சந்தித்தார் விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth meet fans after jailor shooting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->