மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு!
CPIM TN new head Pe Shanmugam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலச் செயலாளராக இருந்த கே. பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கட்சியின் செயற்குழு மற்றும் மத்தியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டின் போது, 80 பேர் கொண்ட மாநிலக் குழு கூட்டத்தில் பெ. சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளின்படி மாநிலச் செயலாளர் 72 வயதிற்குள் இருக்க வேண்டும். இதனால், 71 வயதை கடந்த கே. பாலகிருஷ்ணன் இந்த பதவியில் இருந்து விலகினார்.
1970 ஆம் ஆண்டு கட்சியில் இணைந்த கே. பாலகிருஷ்ணன், இரண்டு முறை மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் ஆறு ஆண்டுகள் இந்த பதவியில் இருந்துள்ளார்.
பெ. சண்முகம் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்ததோடு, இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளராகவும் பணியாற்றியவர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவராகவும் குறிப்பிடத்தக்கவர்.
English Summary
CPIM TN new head Pe Shanmugam