சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான ரம்யா பாண்டியன்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Ramya Pandian act with Mamooty
தமிழ் திரையுலகில் 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் குறும் படங்கள் பலவற்றில் நடித்து நடிகையாக அறிமுகமானவர்.
அதன் பின்னர் ஆண்தேவதை ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். இவர் திரைப்படங்களில் அதிகப்படியாக குணச்சித்திர கதாபாத்திரங்களை தான் தேர்வு செய்து நடித்தார். ரம்யா பாண்டியன் திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்டவர்.
சென்னையில் பொறியியல் துறையில் தனது இளங்கலைப் பட்டத்தை பெற்றார். இவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் 2016 ஆம் ஆண்டின் தேசிய விருது பெற்ற சிறந்த திரைப்படம் ஆகும்.
இந்த நிலையில் இவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி நடிக்கும் படத்தில் அவருடன் நடிக்கவுள்ளதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Ramya Pandian act with Mamooty