ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடிக்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே காதலித்து வந்தனர். இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் பாலிவுட், கோலிவுட் என்று பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட வாழ்த்தினர். திருமணத்திற்கு பின் ஆலியா பட் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளிவந்தது. 

அதனை ஆலியா பட் 3 மாதத்தில் உறுதிப்படுத்தினார். மருத்துவமனையில் செக்கப் செய்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஆலியா பட் தனது சமூக வலைதளம் பக்கத்தில் 'எங்கள் வாழ்க்கையின் சிறந்த செய்தி இதுதான். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராக எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார். தற்போது ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranbir Kapoor Alia Bhatt couples born girl baby


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->