தண்டவாளத்தில் படுத்திருந்த போதை ஆசாமி - ரெயில் சென்றதும் உயிருடன் வந்த சம்பவம்.!
man sleep railway track in kerala
போதை ஆசாமிகள் மதுபோதையில், தண்டவாளத்தில் தூங்குவது, நடுரோட்டில் ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், தங்களது உயிர்களை இழப்பதும் அதிகரிக்கிறது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் பன்னென் பாறையில் சிராக்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்ததார். அப்போது அவர் படுத்திருந்த ரெயில் தண்டவாளத்தை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று கடந்து சென்றது.
இந்த சம்பவத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். அந்த நபரை ரெயில் கடந்ததும் அவர் சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடியபடி சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
man sleep railway track in kerala